செய்திகள்
படத்தொகுப்பு
காணொளிகள்
ஆக்கங்கள்
மரணஅறிவித்தல்
நிகழ்வுகள்
கோயில்கள்
நினைவுகளில்
வாழ்த்துகள்
பெரியார்கள்
தொடர்புகளுக்கு
வேறு தளங்கள்
2012-07-12 12:44:01 [views = 343]குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடர் லட்சுமி!
திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் என்பது சிலர் கூறும் விளக்கம்.
விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும்
இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இன்று ஓடையம்பதி கற்பக விநாயகருக்கு திருவிளக்கு பூசையும் பூச்சப்பரமும் நடைபெற்றது
கன்னி பெண்களும் சுமங்கலி பெண்களும் இரு கைகளாலும் திருவிளக்கை பிடித்து கொண்டு அன்ன நடையிட்டு வர அதன் நடுவே கற்பக விநாயகர் உள்வீதி வலம் வந்து பூச்சப்பரத்தில் ஏறி அமரும் நிகழ்வு கண் கொள்ளா காட்சியாக இருந்தது