உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video) Share

2012-07-12 12:48:48 [views = 429]உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா 02.07.2012 அதாவது இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர், பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை, சண்டேஸ்வர பெருமான்  ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள் வீதி வலம் வந்து பின்னர் தேர் நோக்கி சென்றனர் . பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் அரோகரா.... அரோகரா.... என்று இடை விடாது சொல்லிய வண்ணம் இருந்தனர்.


பின்னர் மூன்று தெய்வங்களும் மூன்று தேர்களில் அமர்ந்து வீதி உலா வந்தனர். விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தேர்கள் வீதி உலா கொண்டு வரும் அடியவர்களுக்கு நமது உரும்பிராய் 
இளைஞர்களினால்   பெரிதும் உதவியது. ஏன் என்றால் அடியவர்கள் தேரை வீதி உலா கொண்டு வரும் போது நமது இளைஞர்களினால் தேர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அடியவர்களுக்கு சக்கரை தண்ணீர் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் தேர்கள் இருப்பிடத்தை வந்து சேர்ந்தது.



அதனை தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்தார்கள். பின்னர் மூன்று தெய்வங்களும் பச்சை சார்த்தப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்பட்டது. தேர்த்திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர். குறிப்பாக வெளிநாடுகளிலும், கொழும்பில் இருந்தும் பல பக்த அடியார்கள் வந்து இருந்தார்கள். இந்த 
முறை உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர்  ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா ஆலய தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.